பேரினவாதம் இலங்கையில் புது வடிவில் தலையெடுத்து எமது சமூகத்தை பல்வேறு வகையில் இன்னலுக்குள்ளாக்கி வந்த வேளையில் எமது சமூகத்தின் குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து எம் சமூக தலைமைகள் மற்றும் மக்களின் உறவுப்பாலமாக இயங்கும் நோக்கில் 2013ம் ஆண்டு ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் சீரிய வழி நடத்தலில் ஆரம்பிக்கப்பட்டது முஸ்லிம் குரல் வானொலி.
லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாகவே ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு நாள் அரசியல் களம், மக்கள் களம் போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டிருந்த போதும் தூர நோக்குடன் 24 மணி நேர வானொலி சேவையொன்றை நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக தனியான இணைய வானொலியாக முஸ்லிம் குரல் வானொலி உருவெடுத்தது.
தற்போது குறிப்பிட்டளவு நிகழ்ச்சிகளுடன் 24 மணி நேரமும் சர்வதேசத்திலும் வாழும் மக்கள் தத்தமது வசதிக்கேற்ப கேட்கக்கூடிய வசதியுடன் எமது சேவை தொடர்ந்து வருகிறது.
இன்ஷா அல்லாஹ் காலப்போக்கில் கடந்த காலத்தில் போன்றே புதுப்புது நிகழ்ச்சிகளுடன் முஸ்லிம் குரலை முழுமையான 24 மணி நேர வானொலியாக உருவாக்கும எம் பயணத்திற்காக உங்கள் பிரார்த்தனைகளையும் பங்களிப்பையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Leave a Reply